D52 திரைப்படத்தின் அதிகாரப்பூரவ அறிவிப்பு| Official announcement of D52 movie
தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் 3 திரைப்படமாகும். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்பொழுது தனுஷ் இயக்கவிருக்கும் 4- வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷ் கதாநாயகனாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை Dawn Pictures என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். தயாரிப்பு நிறுவனம் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இப்படம் மிகப்பெரிய பொருட் செல்வில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாயில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.